விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு - ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு

ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பெயரில் விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.;

Update:2023-02-05 12:09 IST

ஆவடி போலீஸ் கமிஷனரகத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் என்ற கவியரசன் (வயது 30). இவர் விபசார தொழிலில் ஈடுபட்டதாக சமீபத்தில் விபசார தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், விபசார தொழில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த ரமேஷ் என்ற கவியரசனை குண்டர்தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

அதன்பேரில், போலீசார் ரமேஷ் என்ற கவியரசனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்