சென்னை பல்கலைக்கழகத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்

சென்னை பல்கலைக்கழகத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

Update: 2024-02-17 05:13 GMT

சென்னை,

சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கி கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளன. சென்னை பல்கலைக்கழகம் 2017-18 முதல் 2020-21 நிதியாண்டு வரையில் வருமான வரித்துறைக்கு செலுத்தவேண்டிய 424 கோடி ரூபாயை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளது.

நிலுவை வரியை செலுத்தாததால் பல்கலைக்கழகத்தின் 37 வங்கி கணக்குகளை வருமானவரித்துறை இன்று முடக்கியுள்ளது. வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் பேராசிரியர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

முன்னதாக, வருமானவரி செலுத்தாததால் காங்கிரஸ் கட்சியின் 9 வங்கி கணக்குகள், இளைஞர் காங்கிரசின் 2 வங்கி கணக்குகளை வருமானவரித்துறை நேற்று முடக்கியது. பின்னர், வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலையீட்டையடுத்து காங்கிரசின் முடக்கப்பட்ட வங்கி கணக்குகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்