ஆதித்தனார் கல்லூரியில் வளாக தேர்வு

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வளாக தேர்வு நடந்தது.;

Update:2022-05-19 23:07 IST

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கணினியல் துறை சார்பில் வளாக தேர்வு நடைபெற்றது. இதனை ஐகானியா டெக்னாலஜிஸ் என்ற மென்பொருள் நிறுவனம் நடத்தியது. தேர்வு 3 கட்டங்களாக நடைபெற்றது. முதல் நிலை எழுத்து தேர்வில் தேர்வானவர்களுக்கு மூன்று மாத கால மென்பொருள் உருவாக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. அதில் 3 மாணவர்கள் தேர்வு பெற்றனர். அவர்களுக்கு நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த தேர்வானது மாணவர்கள் வழிகாட்டும் மற்றும் பணியமர்த்தும் அலகு மூலமாக நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், தேர்வான மாணவர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் துறை தலைவர் வேலாயுதம், பணியமர்த்தும் அலுவலர் சேகர் மற்றும் பேராசிரியர்கள் பாலகிருஷ்ணன், கவிதா, சுதா மற்றும் ஐகானியா டெக்னாலஜிஸ் இணை நிறுவனர் ராஜசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். தேர்வான மாணவர்களை முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்