மின்சார ரெயில்கள் ரத்து: சென்னையில் நாளை கூடுதலாக 150 மாநகர பஸ்கள் இயக்கம்

சென்னை கடற்கரை - தாம்பரம் வரை இயக்கப்படும் ரெயில்களை நாளை காலை 10 மணிமுதல் பிற்பகல் 3.30 மணி வரை தெற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது.

Update: 2024-03-16 17:13 GMT

கோப்புப்படம்

சென்னை,

சென்னை மாநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தெற்கு ரெயில்வேயின் பராமரிப்பு பணிகள் கோடம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கும், தாம்பரம் ரெயில் நிலையத்திற்கும் இடையே 17-ந் தேதி (நாளை) நடைபெற உள்ளது. இதனால் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் ரெயில் நிலையம் வரை இயக்கப்படும் ரெயில்களை நாளை காலை 10 மணிமுதல் பிற்பகல் 3.30 மணி வரை தெற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது.

எனவே, மேற்குறிப்பிட்ட நேரத்தில் பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுவதால், அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மாநகர போக்குவரத்துக் கழகம் நாளை காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை தாம்பரம், கிண்டி, தியாகராய நகர், சென்டிரல் மற்றும் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பஸ்களுடன் கூடுதலாக 150 பஸ்களை இயக்குகிறது. மேலும், முக்கிய பஸ் நிலையங்களில் அதிகாரிகளை நியமித்து பஸ்கள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்