திருவள்ளூர் அருகே சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து - போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூர் அருகே சரக்கு லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதனால் அந்த வழியாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2022-09-01 08:19 GMT

திருவள்ளூர் அடுத்த ஆவடி நெடுஞ்சாலையான காக்களூர் பகுதியில் நேற்று திருவள்ளூரில் இருந்து சரக்கு ஏற்றி கொண்டு லாரி ஒன்று ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி காக்களூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் அந்த லாரியில் பயணம் செய்த டிரைவர், கிளீனர் லேசான காயத்துடன் தப்பினார்கள். இதனால் அந்த வழியாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் அவதியுற்றனர்.

திருவள்ளூரில் இருந்து ஆவடி சென்ற வாகனங்களும், எதிர் திசையில் ஆவடியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த வாகனங்கள் அனைத்தும் சாலையில் இருபுறமும் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அணி வகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து 2 ராட்சத கிரேன்கள் மூலம் கவிழ்ந்த சரக்கு லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி லாரியை அப்புறப்படுத்தினார்கள். அதனை தொடர்ந்து அந்த வழியாக போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்