பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

வடமதுரை அருகே பெண் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2022-06-07 20:46 IST

வடமதுரை அருகே உள்ள ஆண்டிமாநகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 35). இவர் விழுப்புரம் மாவட்டம், நெடிமொழியனூர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சித்ராராமன் (33) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் சித்ராராமன் தனது கணவர் குடும்பத்தினர் மீது வடமதுரை போலீசில் புகார் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அக்கரைப்பட்டி பிரிவு அருகே சித்ராராமன் சென்றபோது விஜயகுமாரின் தம்பி குருமூர்த்தி, மாமியார் கோகிலாமணி ஆகிய இருவரும் சேர்ந்து சித்ராராமனை வழிமறித்து, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சித்ராராமன் வடமதுரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் குருமூர்த்தி, கோகிலாமணி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்