பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு
கடந்த பிப். 2ம் தேதி பாதயாத்திரையின்போது போக்குவரத்திற்கு இடையூறாக கூட்டம் நடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
திருப்பத்தூர்,
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, ''என் மண், என் மக்கள்'' எனும் முழக்கத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜனதா மாவட்ட தலைவர் வாசு, நகரத் தலைவர் சீனிவாசன் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் தடையை மீறி ஊர்வலம் சென்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆம்பூரில் நேற்று அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்ட நிலையில் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.