இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் விவரங்களை சரிபார்க்க குழு - பள்ளிக்கல்வித் துறை தகவல்

தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் விவரங்களை சரிபார்க்க பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-20 15:01 GMT

சென்னை,

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகள் சேர்ந்து படிக்க வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.

அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் இதற்கென்று தனியாக விண்ணப்பப்பதிவு மேற்கொள்ளப்பட்டு, தகுதியானவர்களுக்கு அந்த இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் இடங்கள் வழங்கப்படுகின்றன. இவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் 2022-23 மற்றும் 2023-24-ம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்ந்து படிக்கும் மாணவ-மாணவிகளின் விவரங்கள் குறித்து சரிபார்க்க பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏற்ற எண்ணிக்கையில் மாவட்ட அளவிலான கல்வி அலுவலர்களின் தலைமையில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், வட்டாரக் கல்வி அலுவலர், ஆசிரியர் பயிற்றுனர், கண்காணிப்பாளர் அல்லது உதவியாளர் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்