மயிலாடுதுறையில் கனமழையால் நீரில் மூழ்கிய பயிர்கள் - இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

பயிர் சேதங்களை கணக்கிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-08-28 17:30 GMT

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் திருவிழந்தூர், மாப்படுகை, சோழம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 8 ஆயிரம் ஏக்கருக்கு மேல் அறுவடை நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன.

விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். பயிர் சேதங்களை கணக்கிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்