கடலூர் திரவுபதி அம்மன் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்

கடலூர் திரவுபதி அம்மன் கோவிலில் 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.;

Update:2023-06-11 00:15 IST

கடலூர் பழைய வண்டிப்பாளையத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினசரி கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வந்தது.

சிகர நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலை 9 மணிஅளவில் 108 பால்குட ஊர்வலம் நடந்தது. இதையொட்டி பெண்கள் 108 பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மாலை 6 மணியளவில் தர்மர் பட்டாபிஷேகமும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது. இதையடுத்து இரவு 7 மணியளவில் சாமி வீதிஉலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி கவுன்சிலர் துர்கா செந்தில் மற்றும் கோவில் நிர்வாகிகள், அப்பகுதி மக்கள் செய்து செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்