விஷவண்டு கடித்து விவசாயி சாவு

விஷவண்டு கடித்து விவசாயி உயிரிழந்தார்.;

Update:2022-11-07 00:15 IST

திருப்புவனம், 

திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்தது வடுகன்குளம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 40). இவர் சம்பவத்தன்று இங்குள்ள தென்னந்தோப்பு பகுதியில் மாடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது விஷ வண்டு கடித்து அவர் படுகாயம் அடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார். இதுகுறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆதிலிங்கம்போஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்