தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-02-01 20:35 GMT

போக்குவரத்து நெரிசல்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் முக்கிய கடை வீதியான மதுரை ரோட்டில் சிலர் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகேசன்,டி.கல்லுப்பட்டி.

நடவடிக்கை தேவை

மதுரை நெல்பேட்டை மார்க்கெட் பஸ் நிறுத்தத்தில் ஆக்கிரமிப்புகள் நிறைந்துள்ளன. இதனால் இந்த பஸ் நிறுத்தத்திற்கு வரும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயபெல்லா, நெல்பேட்டை.

சுகாதார சீர்கேடு

மதுரை மாவட்டம் கோவில் பாப்பாகுடி ஊராட்சி சத்யாநகரில் பல மாதங்களாக கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாததால் கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள பல குழந்தைகள் காய்ச்சல் போன்ற நோய் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இந்த கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜன், மதுரை.

வாகன ஓட்டிகள் அவதி

மதுரை மாநகராட்சி 39 -வது வார்டு யாகப்பா நகர் எம்.ஜி.ஆர். தெருவில் பாதாள சாக்கடை பணிகள் பல நாட்களாக நடைபெற்று முடிந்தன. இருப்பினும் இன்னும் குழிகள் மூடப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதில் சிக்கிக்கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே இந்த குழியை விரைவாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரபாகரன், மதுரை.

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

மதுரை தெற்கு வாசல் பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளன. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அசோக்குமார், மதுரை.

Tags:    

மேலும் செய்திகள்