'நீட்' தேர்வுக்கு எதிராக தி.மு.க. நடத்தும் கையெழுத்து இயக்கம் - கே.எஸ்.அழகிரி கையெழுத்திட்டார்

சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் கே.எஸ்.அழகிரியிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து பெற்றார்.

Update: 2023-11-03 07:29 GMT

சென்னை,

நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் 21-ந்தேதி தொடங்கினார். இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று முதல் கையெழுத்தை பதிவு செய்தார். 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகளை பெறும் வகையில் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து பெற்றார். மேலும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை, பீட்டர் அல்போன்ஸ், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, விஜய் வசந்த் எம்.பி. உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று கையெழுத்திட்டனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்