"மத்தியில் விரைவில் திராவிட மாடல் ஆட்சி" - திமுக எம்.பி டி.ஆர்.பாலு அதிரடி

மத்தியில் விரைவில் திராவிட மாடல் ஆட்சி அமையும் என்று திமுக எம்.பி டி ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.;

Update:2022-05-19 14:31 IST

சென்னை,

மாநில சுயாட்சி கொடுக்க மத்தியில் விரைவில் திராவிட மாடல் ஆட்சி வரும் என்று திமுக எம்பி டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். மாநில சுயாட்சியுடன் சமூக நீதி இணைந்ததுதான் திராவிட மாடல் என்று தெரிவித்த அவர் விரைவில் மத்தியில் திராவிட மாடல் ஆட்சி வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கக் கூட்டத்தில் பேசிய அவர், 'திராவிட மாடல் என்பது மாநில சுயாட்சி. அந்த மாநில சுயாட்சி கொள்கையோடு சமூக நீதியும் இணைந்தது தான் திராவிட மாடல். விரைவில் மத்தியில் திராவிட மாடல் ஆட்சி அமையும். மாநில சுயாட்சி கிடைக்கும்' என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்