சிலிண்டர் விலை உயர்வு: திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மண்பானையை பரிசாக கொடுத்த மணமகன்..!

புளியரையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு தாம்பூலத்துடன் மண்பானை வழங்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-01 13:13 GMT

தென்காசி:

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த புளியரை பகுதியைச் சேர்ந்த அந்தோணிக்கும் கடையம் பகுதியை சேர்ந்த இசைப்பிரியா என்பவருக்கும் இன்று புளியரையில் திருமணம் நடைபெற்றது.

திருமண விழாக்களில் கலந்து கொள்பவர்களுக்கு தாம்பூலம் கொடுப்பது வழக்கமாக உள்ளது. அதுபோன்று இந்த திருமண விழாவில் தாம்பூலம் வழங்கும்போது எல்லோருக்கும் ஒரு மண் பானையும் வழங்கப்பட்டது.

இது குறித்து மணமகன் ஆரோன் அந்தோணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்து கொண்டே போகிறது. இந்த நிலையில் மண்பானையை வைத்து விறகு அடுப்பில் சமையல் செய்தால் பணமும் மிச்சமாகும். அதே நேரத்தில் மண்பானை உணவு சாப்பிடும்போது உடலுக்கு நன்மையை கொடுக்கும். தற்போது கொரோனா போன்ற பல்வேறு நோய்கள் பரவுவதற்கு நமது உணவுப் பழக்கமும் ஒரு காரணம். பண்டைய காலத்தில் மண்பானை உணவு சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாக இருந்துள்ளனர்.


எனவே இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் மண்பாண்டத் தொழில் நசிந்து விடக்கூடாது என்பதற்காகவும் எனது திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மண்பானை வழங்கினேன் என்றார்.

திருமண விழாவில் மண்பானை வழங்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்