"மகளிர் உரிமைத்தொகை" மாதம் ரூ.1000 வரும் செப்டம்பர் 15 முதல் வழங்கப்படும்-தமிழ்நாடு பட்ஜெட் முழு விவரம்

'மகளிர் உரிமைத்தொகை' தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வரும் நிதியாண்டும் முதல் வழங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து உள்ளார்.

Update: 2023-03-20 04:24 GMT


Full View


Live Updates
2023-03-20 07:48 GMT

ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சியில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகள் அமைக்கப்படும்

2023-03-20 07:46 GMT

இந்தியாவில் உற்பத்தியான மின்சார வாகனங்களில் 46 சதவீதம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை. பசுமை வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முதல் இடம்.

2023-03-20 07:44 GMT

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. வெளிமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வதந்தி வீடியோ பரப்பிய சமூகவிரோதிகள் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2023-03-20 07:41 GMT

ஊராட்சி மற்றும் நகராட்சிகளில் அனைத்து அரசு துறை சேவை முகாம்கள் நடத்தப்படும்

2023-03-20 07:37 GMT

முதல்-அமைச்சரின் முகவரி திட்டத்தின் மூலம் பெறப்பட்ட 17.7 லட்சம் மனுக்களில் 17.3 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

2023-03-20 07:34 GMT

நில பதிவு கட்டணம் 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

2023-03-20 07:32 GMT

ரூ.2 லட்சம் கோடி முதலீடுகள் பெறும் வகையில் 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது

2023-03-20 07:32 GMT

அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டும் முன்பணம் 40 லட்சத்தில் இருந்து 50 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

2023-03-20 07:30 GMT

2030-ம் ஆண்டுக்குள் 14,500 மெகாவாட் திறன் கொண்ட புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மின்சாரத்துறையின் நிதி நிலை மேம்படுத்தப்படும்

2023-03-20 07:28 GMT

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்