தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு

தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகள் அழைப்பிதழ் கொடுத்தனர்.;

Update:2023-10-26 16:18 IST

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் தேவர் ஜெயந்தி விழா வருகிற 30-ந் தேதி நடக்கிறது. அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பாரதீய பார்வர்டு பிளாக் நிறுவனர் முருகன்ஜி ஏற்கனவே அழைப்பு விடுத்து இருந்தார். இந்த நிலையில் பல்வேறு அமைப்பினர் எடப்பாடி பழனிசாமியை இன்று சேலத்தில் சந்தித்து தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் புரட்சி பார்வர்ட் பிளாக் ஆண்டித்தேவர் பிரிவு தலைவர் முத்துராமன், முக்குலத்தோர் உறவின்முறை சங்கம் மறத்தமிழர் சேனை ஆதிமுத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள், அகில இந்திய மருதுபாண்டியர் பேரவை கண்ணன் மற்றும் நிர்வாகிகள், தமிழ்நாடு அகமுடையார் மக்கள் தலைவர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் 27-ந் தேதி காளையார் கோவிலில் நடைபெறும் மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினர். இந்த நிகழ்வின் போது முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்கள் வெற்றிவேல், துரை தனராஜன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கலை பிரிவு செயலாளர் சிவசக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்