கஞ்சா விற்ற முதியவர் கைது

கம்பத்தில் கஞ்சா விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-06-23 22:19 IST

கம்பம் நாககன்னியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய ஆனந்த் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா விற்று கொண்டிருந்த 4 பேர் தப்பி ஓடினர். இதில் ஒருவரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர், கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்த பாண்டியன் (வயது 67) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கம்பம் கோம்பை ரோடு தெருவை சேர்ந்த விஜயன், ஜெகநாதன், அன்பு ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்