சென்னையில் அமலாக்கத்துறை சோதனை

சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-04-18 06:08 GMT

சென்னை:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் முபாரக் உசேன் என்பவரது வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போன்று நுங்கம்பாக்கம் குமாரமங்கலம் சாலையில் உள்ள ஐ.டி. ஊழியர் தர்சன்குமார் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குமரன்நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் ஆடிட்டர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த 3 இடங்களிலும் நடத்தப்பட்டு வரும் சோதனையில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அடுத்த கட்ட விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். சோதனையின் முடிவில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்