இரட்டை இலை சின்னம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க ஈபிஎஸ் தரப்பு முடிவு
எடப்பாடி பழனிசாமி தரப்பில் சி.வி.சண்முகம் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.;
கோப்புப்படம்
சென்னை,
அதிமுக பொதுக்குழு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக இதுவரை யாரும் எங்களை அணுகவில்லை என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து சி.வி.சண்முகம் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க உள்ளார். இன்று பகல் 1.30 மணியளவில் தேர்தல் அதிகாரிகளை சந்திக்கும் அவர், அதிமுக பொதுக்குழு தொடர்பாகவும், இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.