மண்டபத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

மண்டபத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Update: 2022-12-19 18:10 GMT

மண்டபம், 

வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து மண்டபம் பகுதியில் நேற்று மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டதால் வடக்கு மற்றும் தெற்கு துறைமுக கடல் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

மண்டபம் தெற்கு மற்றும் வடக்கு கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது.

ஏர்வாடி, தொண்டி, சோழியகுடி, வாலிநோக்கம் மூக்கையூர், தேவிபட்டினம், திருப்பாலைக்குடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகு, நாட்டு படகு மற்றும் பைபர் படகுகளும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்