பெண்ணிடம் ரூ.13 லட்சம் மோசடி; அண்ணன்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு

களக்காட்டில் பெண்ணிடம் ரூ.13 லட்சத்தை மோசடி செய்ததாக அண்ணன்கள் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-07-27 20:12 GMT

களக்காடு:

களக்காட்டில் பெண்ணிடம் ரூ.13 லட்சத்தை மோசடி செய்ததாக அண்ணன்கள் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ரூ.13 லட்சம் மோசடி

களக்காடு கிருபாளினி வீதியைச் சேர்ந்தவர் டேவிட்சன். இவருடைய மனைவி ரெஜினா டேவிட்சன் (வயது 49). இவருடைய அண்ணனான சிவந்திபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் (52), சவுதி அரேபியாவில் வேலை செய்தார்.

கடந்த 15.10.2008 அன்று ரெஜினா டேவிட்சனின் மற்றொரு அண்ணனான இடையன்குளத்தைச் சேர்ந்த செல்வராஜ் (62), ரெஜினா டேவிட்சனை தொடர்பு கொண்டு சவுதி அரேபியாவில் ஒரு வழக்கில் ஜெயக்குமாரை கைது செய்துள்ளனர். அவரை விடுவிக்க ஏற்பாடு செய்ய ரூ.13 லட்சம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதனால் ரெஜினா டேவிட்சன் ரூ.13 லட்சத்தை கொடுத்துள்ளார்.

அதன் பின்னர் சகோதரர்கள் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதையடுத்து பணத்தை கேட்ட ரெஜினா டேவிட்சனுக்கு ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

6 பேர் மீது வழக்கு

இதுகுறித்து ரெஜினா டேவிட்சன் களக்காடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக ஜெயக்குமார், செல்வராஜ், ஜெயக்குமாரின் மனைவி ராணி எலிசபெத் (48), செல்வராஜின் மனைவி ஜெபா சுகந்தி (58), உறவினர்களான விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பழனி என்ற பழனிசாமி (61), ஆறுமுகம் (52) ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்