இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

Update: 2023-10-15 20:01 GMT

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 28-வது வார்டு பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாநகராட்சி கவுன்சிலர் வெயில்ராஜ் தலைமை தாங்கினார். மாநகர வர்த்தக அணி நிர்வாகி இன்பம் தொடங்கி வைத்தார். 300-க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டு கண்களை பரிசோதனை செய்து கொண்டனர். டாக்டர் ஜெயசுதா தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை செய்து தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கினர். முகாமில் மண்டல தலைவர் சூர்யா, படக்கடை கருப்பசாமி, தி.மு.க. நிர்வாகிகள், கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்