கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத்தங்கத்தில் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்துள்ளது.

Update: 2022-10-04 05:06 GMT

சென்னை,

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்துடன் காணப்படுகிறது. நேற்று ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து ரூ.37 ஆயிரத்து 640க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.560 உயர்ந்துள்ளது. தற்போது ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.38,200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல ஒருகிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து 4 ஆயிரத்து 775 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 66 ஆயிரத்து 700 ரூபாயும், ஒருகிராம் 66.70 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்