அரசு ஊழியர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பை கைவிட வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

Update: 2024-02-13 13:22 GMT

சென்னை,

அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

அரசு ஊழியர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும். அரசின் நிதிநிலை சீரானதும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பை கைவிட வேண்டும்.

வேலைநிறுத்த அறிவிப்பைக் கைவிட்டு அரசுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசு ஊழியர் ஒவ்வொருவரின் முக்கியத்துவத்தையும் அரசு உணர்ந்துள்ளது. அரசு வருவாயை பெருக்கி நிதிநிலையை சீர்செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மத்திய அரசின் நிதி பெறப்படாதது, ஜி.எஸ்.டி இழப்பீடு ரூ. 20,000 கோடி நிறுத்தத்தால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்