இஸ்ரோவில் கல்வி கற்க செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்... வாழ்த்தி அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர்

இஸ்ரோவில் கல்வி கற்க நீலகிரியை சேர்ந்த மேலும் மூன்று அரசு பள்ளி மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.;

Update:2022-11-01 22:13 IST

ஈரோடு,

இஸ்ரோவில் கல்விகற்க நீலகிரியை சேர்ந்த மேலும் மூன்று அரசு பள்ளி மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். ஏற்கெனவே இரண்டு மாணவர்கள் தேர்வாகி இருந்தனர். தற்போது ஐந்து மாணவர்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

இந்த ஐந்து மாணவர்களும் பெங்களூர் இஸ்ரோ ஆய்வு மையம் மற்றும் சென்னை என இரு இடங்களுக்கும் சென்று பயிற்சி பெற இருக்கின்றனர். மேலும், செயற்கைக்கோள் உருவாக்கம் மற்றும் ஏவுகணை ஏவுதல் குறித்து கல்வி கற்க இருக்கின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்