சிதம்பரம் நடராஜர் கோவிலை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கில்லை - அமைச்சர் சேகர்பாபு

சிதம்பரம் நடராஜர் கோவிலை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கில்லை என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.;

Update:2023-01-04 11:18 IST

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் 24 மணி நேர உதவி மையத்தை தொடங்கி வைத்த பின் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

சிதம்பரம் நடராஜர் கோவிலை பொறுத்தவரை எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் மிக அழுத்தமாகவும், ஆதாரப்பூர்வானமான நடவடிக்கைகளை சேகரித்து கொண்டிருக்கிறோம்.

புகார்கள் விசாரணைக்கு வந்த போதே கோர்ட்டுக்கு செல்வோம் என்று தீட்சிதர்கள் தரப்பிலே கூறினார்கள். அவர்கள் கோர்ட்டுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்த்தோம், ஆனால் இதுவரைக்கும் அவர்கள் கோர்ட்டுக்கு செல்லவில்லை.

அடுத்தக்கட்ட ஆய்வுக்கான நகர்வுகளை துறையின் செயலாளர், ஆய்வாளர் செய்துக் கொண்டிருக்கிறார்கள். திருக்கோவிலில் அத்துமீறல்கள் இருப்பது தகுந்த ஆதாரங்களோடு ஏற்படுத்தப்பட்ட பிறகு உறுதிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சிதம்பரம் நடராஜர் கோவிலை பொறுத்தவரை அரசுக்கு கையகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. பக்தர்களின் காணிக்கையால் நடத்தப்படுகின்ற திருக்கோவிலில் பக்தர்களின் தரிசனத்திற்கு உண்டான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் இந்து சமய அறநிலையத்துறையின் நோக்கம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்