9-ந் தேதி நடக்கிறது: சென்னை போலீஸ் அருங்காட்சியகத்தில் உணவு திருவிழா - பொதுமக்கள் கலந்துகொள்ள கமிஷனர் அழைப்பு

சென்னை போலீஸ் அருங்காட்சியகத்தில் வருகிற 9-ந் தேதி கலாசார உணவு திருவிழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக கமிஷனர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறி இருப்பதாவது-

Update: 2023-06-06 06:14 GMT

சென்னை எழும்பூர் பழைய கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள போலீஸ் அருங்காட்சியகத்தில் வருகிற 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணி அளவில் பிரமாண்ட உணவு திருவிழா நடைபெற உள்ளது. நமது பாரம்பரியம் மற்றும் உணவு கலாசாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் வடமாநில உணவு வகைகள் இடம் பெறும்.

கிராமத்து பால் வகைகள், ஜப்பான் கேக், கருப்பட்டி காபி, கொங்கு நாட்டுக்கறி விருந்து வகைகள் இந்த உணவு திருவிழாவில் சுவைக்க காத்திருக்கிறது. அவற்றை உண்டு சுவைத்து மகிழலாம்.

பிரபல சமையல் கலைஞர் தாமு இந்த திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலின் நேரடி மேற்பார்வையில், சென்னை தலைமையக இணை போலீஸ் கமிஷனர் சாமுண்டீஸ்வரி இந்த உணவு திருவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். பொதுமக்கள் இந்த உணவு திருவிழாவில் கலந்து கொண்டு உண்டு மகிழ வேண்டும் என்று அழைக்கிறோம்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்