குடியாத்தம் பகுதியில் பலத்த மழை

குடியாத்தம் பகுதியில் பலத்த மழைபெய்தது. இதனால் மரம் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-06-21 17:31 GMT

குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் குடியாத்தம் நகரில் தாழ்வான பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில பகுதிகளில் மழை நீரும் கழிவு நீரும் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

கிராமப்பகுதிகளில் பல இடங்களில் சிறுசிறு மரங்கள் சாய்ந்தன. குடியாத்தம்-காட்பாடி ரோட்டில் தனியார் நூற்பாலை அருகே சாலையில் பல ஆண்டு பழமையான புளியமரம் நேற்று காலையில் திடீரென சாய்ந்து விழுந்தது. மின்கம்பங்கள் மீதும் மரம் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் மரத்தை துண்டித்து போக்குவரத்துக்கு வழி செய்தனர். தொடர்ந்து பழுதான மின் கம்பங்களை சீர் செய்து மின் இணைப்பு வழங்கினார்கள்.

குடியாத்தம் பகுதியில் 37 மில்லி மீட்டர் மழையும், மேல்ஆலத்தூர் பகுதியில் 51 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.

Tags:    

மேலும் செய்திகள்