ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

பாளையங்கோட்டையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

Update: 2023-03-20 19:56 GMT

சேரன்மாதேவி:

நெல்லை மாநகர காவல்துறை, கோபாலசமுத்திரம் கிராம உதயம் மற்றும் தூய சவேரியார் சமூக பணித்துறை மாணவர்கள் இணைந்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள், துணிப்பைகள் வழங்கும் நிகழ்ச்சியை பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் நடத்தியது.

நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமை தாங்கி, பேரணியை தொடங்கி வைத்தார். கிராம உதயம் நிர்வாக இயக்குனர் சுந்தரேசன் முன்னிலை வகித்தார். பகுதி பொறுப்பாளர் முருகன் வரவேற்று பேசினார். ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங், தூய சவேரியார் சமூக பணித்துறை தலைவர் பால்ராஜ், உதவி பேராசிரியர் சகாயராஜ், கிராம உதயம் தலைமை அலுவலகம் நிர்வாக மேலாளர் மகேஷ்வரி, பகுதி பொறுப்பாளர்கள் சுசிலா, ஆறுமுகத்தாய் ஆகியோர் பேசினார்கள். பேரணியின் போது, நெல்லை மாநகர பகுதி முழுவதும் சாலை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் துணிப்பைகள் வழங்கப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முடிவில், கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் பேச்சியம்மாள் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்