தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் அதிகரிப்பு; கடலூர் போலீசார் சார்பில் மீட்புக்குழு அமைப்பு

மீட்புக்குழுவினர் ரப்பர் படகில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.;

Update:2023-11-14 07:40 IST

கடலூர்,

தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி ஆற்றில் சிக்குபவர்களை மீட்பதற்காக கடலூர் மாவட்ட போலீசார் சார்பில் 10 பேர் கொண்ட மீட்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மீட்புக்குழுவினர் ரப்பர் படகில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்