அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 7ம் சுற்று நிறைவில் 15 காளைகளை அடக்கி கார்த்திக் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப்போட்டியில் வீரர் கார்த்தி 2-ம் இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு -8 வது சுற்று விறுவிறு
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 8-வது சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 7 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் 8-வது சுற்றில் காளைகள்,காளையர் களமிறங்கி உள்ளனர்.
காளைக்கு காயம் - மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் விறு விறுப்புடன் துவங்கியது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 6-ம் சுற்று நிறைவு பெற்றது: 15 காளைகளை அடக்கி கார்த்திக் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5-ம் சுற்று நிறைவு: 15 காளைகளை அடக்கி அவனியாபுரம் வீரர் கார்த்திக் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ரஞ்சித்குமார் 13 காளைகளை அடக்கி 2 வது இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் 7 காளைகளை அடக்கி முத்துகிருஷ்ணன் உள்ளார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இதுவரை 33 பேர் காயம் அடைந்துள்ளனர். 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 4ம் சுற்று நிறைவு: 16 காளைகளை அடக்கி கார்த்திக் தொடர்ந்து முதலிடம்!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 3-ம் சுற்று நிறைவடைந்து 4-ம் சுற்று தொடங்கியது; 3-ம் சுற்று முடிவில் 265- காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்தி 15 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 2ஆம் இடத்தை கார்த்தி பிடித்து இருந்தார். அவனியாபுரத்தை சேர்ந்த ரஞ்சித் 13 காளைகளை பிடித்து இரண்டாம் இடத்திலும் தேனி சீலையாப்பட்டியை சேர்ந்த முத்து கிருஷ்ணன் 7 காளைகளை பிடித்து 3 -ம் இடம் வகிக்கிறார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இதுவரை 11-வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.