மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

Update:2024-01-15 07:19 IST
Live Updates - Page 3
2024-01-15 04:18 GMT



2024-01-15 03:50 GMT

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 3 ஆம் சுற்று தொடங்கியது

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 2-ம் சுற்று நிறைவடைந்து 3-வது சுற்று தொடங்கியுள்ளது. 3ஆம் சுற்றில் வீரர்கள் ஆரஞ்சு நிற உடை அணிந்து களம் கண்டுள்ளனர். முதல் மற்றும் இரண்டாவது சுற்று முடிவில் இதுவரை 172 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.

தேனி சீலையாப்பட்டி பகுதியை சேர்ந்த மாடுபிடி வீரர் முத்து கிருஷ்ணன் 7 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார். அவனியாபுரம் பகுதியை சேர்ந்த வீரர் கார்த்தி, ரஞ்சித் தலா 6 காளைகளை அடக்கி 2-வது இடத்தில் உள்ளனர். 

2024-01-15 03:21 GMT

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர்.

2024-01-15 03:20 GMT

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் விசிக தலைவர் திருமாவளவன் காளை வெற்றி பெற்றது

2024-01-15 03:20 GMT

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 12 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

2024-01-15 02:51 GMT

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

*முதல் சுற்று முடிவில் தேனி சீலையம்பட்டி பகுதியை சேர்ந்த மாடுபிடி வீரர் முத்துகிருஷ்ணன் 6 காளைகள் அடக்கி முதலிடம் பிடித்துள்ளார்.

*அவனியாபுரம் பகுதியை சேர்ந்த திருப்பதி, மணி தலா 4 வீரர்களை பிடித்து 2-ஆம் இடம்

*மதுரை வளையங்குளம் பகுதியை சேர்ந்த பாலா 2 காளைகளை அடக்கி 3 ஆம் இடத்தில் உள்ளார்.

*மதுரை அவனியாபுரம் ஜி.ஆர். கார்த்தி என்பவரது காளை சிறந்த காளையாக தேர்ந்தெடுக்கப்பட்ட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்