கொடுங்கையூர் குப்பை கிடங்கில் மீண்டும் தீ விபத்து - மாநகராட்சி மேயர் பிரியா பார்வையிட்டு ஆய்வு

கொடுங்கையூர் குப்பை கிடங்கில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தீ விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

Update: 2022-05-25 11:58 GMT

சென்னையின் பிரதான குப்பை கிடங்கான கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கடந்த 20-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது. 6 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் மீண்டும் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல வட்டார துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் பெரம்பூர் எம்.எல்.ஏ. ஆர்.டி.சேகர். மாநகராட்சி அதிகாரிகள் தீ விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

அதைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதனால் அடுத்தடுத்த இடங்களுக்கு பரவ இருந்த தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது தொடர்ந்து கோடை காலத்தில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து மாநகராட்சி மேயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்