கிருஷ்ணகிரி: கர்நாடக அரசுப் பேருந்து - இருசக்கர வாகனம் மோதி விபத்து.. இருவர் உயிரிழப்பு !

விபத்து காரணமாக கர்நாடக அரசு பேருந்து முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது நாசமானது.;

Update:2023-01-08 13:59 IST

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேசியநெடுசாலையில் பைக் -கர்நாடக அரசுப்பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. விபத்து காரணமாக கர்நாடக அரசு பேருந்து முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது நாசமானது.

உடனடியாக இதுகுறித்து தகவல் அறிந்த தீயனைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை வேகமாக அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற சுந்தரேசன், கணேசன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்