திருவள்ளூர் கிளை அலுவலகத்தில் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்

திருவள்ளூர் கிளை அலுவலகத்தில் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கும் விழா நடக்கிறது.;

Update:2023-08-20 19:57 IST

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், நடத்தும் சிறப்பு தொழிற் கடன் விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தொழிலை விரிவுப்படுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் என பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

திருவள்ளூர் கிளை அலுவலகத்தில் எண்: 86 சி-டி 2-வது பிரதான சாலை அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூரில் நாளை (திங்கட்கிழமை) முதல் அடுத்து மாதம் 1-ந்தேதி வரை இந்த சிறப்பு தொழில் கடன் விழா நடக்கிறது.

இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மட்டும் மத்திய மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்