பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2022-11-05 00:15 IST

கோவை

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட அமைப்பாளர் தங்கவேலு தலைமை தாங்கினார். மணியன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், சம்பள உயர்வு, பணி பாதுகாப்பு, மானிய விலையில் கலப்பு உரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட தலைவர் இளங்கோவன், செயலாளர் பழனிசாமி, துணைத்தலைவர் காளப்பன், ஆறுச்சாமி, சுகுமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்