அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு

விருதுநகருக்கு வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update:2023-10-25 02:15 IST

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) விருதுநகரில் நடைபெறும் அரசு விழா மற்றும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருதுநகர் வருகிறார்.

அவரை வரவேற்க தேவையான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிவகாசி மாநகர தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமையில் நடைபெற்றது. இதில் பகுதி செயலாளர்கள் அ.செல்வம், மாரீஸ்வரன், கருணாநிதி பாண்டியன், காளிராஜன், இளைஞரணி மாவட்ட நிர்வாகி திலீபன் மஞ்சுநாத், ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் விருதுநகர் வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சிவகாசி மாநகர நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என 1200 பேர், 50-க்கும் அதிகமான வாகனங்களில் சென்று உற்சாக வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதேபோல் சிவகாசி ஒன்றிய செயலாளர் விவேகன்ராஜ் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கையில் தி.மு.க. கொடியுடன் விருதுநகர் ஆர்.ஆர்.நகர் பகுதியில் அமைச்சர் உதயநிதிக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்