நாகர்கோவில்:
மணிக்கட்டி பொட்டல் அருகே உள்ள கீழ உடையப்பன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 55), அரசு பள்ளி ஆசிரியர். இவர் தனது மோட்டார் சைக்கிளை பார்வதிபுரம் பாலத்தின் கீழ் நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதை யாரோ மர்மநபர் திருடி சென்று விட்டார். இதுபற்றி வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.