மோட்டார் சைக்கிள் திருட்டு

நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-03-21 20:35 GMT

பாளையங்கோட்டை அருகே உள்ள வீரமாணிக்கபுரத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 55). இவர் தனது மோட்டார் சைக்கிளை நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு பயிற்சி மையம் முன்பு நிறுத்தி இருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது மர்மநபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்