உரக்கடையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்
உரக்கடையை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.;
இளையான்குடி
இளையான்குடி அருகே உள்ள செந்தமிழ் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார்(வயது 53). இவர் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரராக உள்ளார். மேலும் சாணாரேந்தல் விலக்கு பகுதியில் மொத்த நெல் கொள்முதல் நிலையம், உரக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் இவருடைய நெல் கொள்முதல் நிலையம், உரக்கடையை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாகவும், செல்போன் மூலம் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து முத்துக்குமார், இளையான்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரிடமும் இதுகுறித்து முத்துக்குமார் புகார் மனு கொடுத்துள்ளார்.