திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.5½ கோடியில் புதிய கட்டிடம்

திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.5½ கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.

Update: 2022-10-29 18:45 GMT

திருப்புவனம், 

திருப்புவனத்தில் மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் செயல்பட்டு வந்தது. இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின்கீழ் தற்சமயம் 45 ஊராட்சி மன்றங்களை சேர்ந்த தலைவர்கள், 17 ஒன்றிய குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சுமார் 150 கிராமங்களை சேர்ந்த மக்கள் வரும் இடமாக இந்த அலுவலகம் திகழ்ந்தது. பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு 1971-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமான பணிகள் ஒரு வருடத்தில் முடிக்கப்பட்டு 1972-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. அதிலிருந்து சுமார் 50 வருடங்களாக பழைய அலுவலக கட்டிடம் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையின் அருகே அலுவலகம் இருப்பதாலும், வைகை ஆற்றுக்கு அருகில் உள்ளதாலும் கட்டிடத்தின் பல பகுதிகள் சேதமடைந்தது. இதையடுத்து இந்த பழமையான கட்டிடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. அதன்படி ஒட்டுமொத்த வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 55 லட்சத்திற்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் மூலம் புதிய கட்டிடம் கட்டுவதற்கு டெண்டர் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி நேற்று தொடங்கியது. 

Tags:    

மேலும் செய்திகள்