ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி மூதாட்டி சாவு

Update:2023-06-13 01:00 IST

பென்னாகரம்:-

பென்னாகரம் அருகே ஒகேனக்கல் ஊட்டமலை பகுதியை சேர்ந்தவர் ரங்கம்மாள் (வயது 60). இவர், நேற்று காலை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் துணி துவைப்பதற்காக சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக பாறை வழுக்கி ஆற்றில் விழுந்து விட்டார். இதில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறநந்தார். இதுதொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த போது 25 வயது முதல் 35 வயது வரை மதிக்கத்தக்க நபர் பிணம் தண்ணீரில் மிதந்து வந்தது. பிணத்தை மீட்ட போலீசார் இதுதொடர்பாகவும் விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்