ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் - புகைப்படத் தொகுப்பு
கேரளா மட்டுமின்றி மலையாள மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.;
கோவை சித்தாபுதூர் அய்யப்பன் கோவிலில் பிரமாண்டமாக போடப்பட்டுள்ள அத்தப்பூ கோலம்
ஒணம் பண்டிகையை முன்னிட்டு சாமி தரிசனத்திற்காக பத்மநாபசாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
ஓணம் பண்டிகையையொட்டி உஞ்சலாடி மகிழ்ந்த இளம் பெண்கள்
ஓணம் பண்டிகையையொட்டி தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்த குழந்தைகள்.
பத்மநாபபுரம் ராமசுவாமி கோவிலில் அத்தப்பூ கோலமிட்ட பக்தர்கள்
கூடலூரில் ஓணம் பண்டிகையை ஒட்டி வீட்டின் முன்பு அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்த மக்கள்
நாகர்கோவில் ஒணம் பண்டிகையை முன்னிட்டு இளம் பெண்கள் ஊஞ்சல் ஆடிய மகிழ்ந்தனர்.
ஒருவருக்கு ஒருவர் ஓணம் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட பெண்கள்.
சென்னை,
கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஓணம் பண்டிகை திகழ்கிறது. கேராளாவில் மட்டுமின்றி உலகெங்கிலும் வாழும் மலையாள மக்கள் அனைவரும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற வேறுபாடு இன்றி அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் பண்டிகை ஓணம்.
கேரளாவை ஆட்சி செய்த மாவேலி மன்னா ஆண்டுக்கு ஒருமுறை தன் நாட்டு மக்களை காண வருவதை நினைவுகூறும் வகையில், மாவேலியை வரவேற்கும் விதமாகவே ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.