இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு ஓராண்டு சிறை

திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு ஓராண்டு சிறை

Update: 2022-09-27 18:45 GMT

விழுப்புரம்

திண்டிவனம் தாலுகா செம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 24 வயது பெண்ணும், அதே கிராமத்தை சேர்ந்த எட்டியான் மகன் ராமச்சந்திரன் என்பவரும் கடந்த 2013-ம் ஆண்டு பழகி வந்தனர். அப்போது ராமச்சந்திரன் அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்தார். அதன் பிறகு அந்த பெண், ராமச்சந்திரன் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி கேட்டதற்கு திருமணம் செய்ய மறுத்த ராமசந்திரன், அவரது தந்தை எட்டியான், தாய் பரிமளா, சகோதரி புவனேஸ்வரி, உறவினர் துரை ஆகியோர் சேர்ந்து அந்த பெண்ணை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரன், எட்டியான், பரிமளா, துரை, புவனேஸ்வரி ஆகியோரை கைது செய்து இவர்கள் மீது விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட ராமச்சந்திரனுக்கு(26) ஓராண்டு சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும், மற்ற 4 பேரை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் நீதிபதி(பொறுப்பு) சாந்தி தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சங்கீதா ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்