பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா

சுரண்டை அருகே பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.;

Update:2022-06-17 20:45 IST

சுரண்டை:

சுரண்டை அருகே கரையாளனுர் கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். தென்காசி எம்.எல்.ஏ. பழனி நாடார் ரேஷன் கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் முரளிராஜா, ஆலங்குளம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன், ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன், குறிச்சாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் மகரஜோதி சரவணன், அரசு ஒப்பந்ததாரர் கரையாளனூர் சண்முகவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்