ஏரியில் மூழ்கி பிளஸ்-2 மாணவர்கள் சாவு

ஆவடியில் ஏரியில் மூழ்கி பிளஸ்-2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.;

Update:2022-07-26 08:52 IST

ஆவடி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவருடைய மகன் சஜீவன் (வயது 17). இவர், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் அருளரசன் (17) மற்றும் பிரவீன் வெங்கடேசன் (17) ஆகியோருடன் நேற்று கோலப்பஞ்சேரி சுங்கச்சாவடி அருகே உள்ள ஏரியில் குளித்து கொண்டு இருந்தார்.

அப்போது சஜீவன் மற்றும் அருளரசன் இருவரும் நீரில் மூழ்கி பலியானார்கள். இதுபற்றி தகவல் அறிந்து வந்த வெள்ளவேடு போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள், 2 மணி நேர தேடுதலுக்கு பிறகு 2 பேரின் உடல்களையும் மீட்டனர். பலியான 2 பேரும் பிளஸ்-2 படித்து முடித்து விட்டு கல்லூரியில் சேர இருந்தனர். இதுபற்றி வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்