திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி சிறுமியை கடத்திய வாலிபா் போக்சோவில் கைது

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி சிறுமியை கடத்திய வாலிபா் போக்சோவில் கைது;

Update:2023-02-08 02:02 IST

நம்பியூர்

நம்பியூர் அருகே உள்ள சங்கம்பாளையம் காட்டுத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 28). டிரைவர். இவர் கடந்த நவம்பர் மாதம் 14-ந் தேதி நம்பியூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி கடத்தி சென்றுவிட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தகுமாரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் பல்லடம் பகுதியில் பதுங்கி இருந்த ஆனந்தகுமாரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவருடன் தங்கி இருந்த 17 வயது சிறுமியையும் போலீசார் மீட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்