போஸ்டர் யுத்தம்... 'ஆளுநரின் ஆளுமையே' என புதுக்கோட்டையில் போஸ்டர் ஒட்டிய பாஜகவினர்

கவர்னர்- ஆளும் கட்சி மோதல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் திமுக - பாஜக இடையே போஸ்டர் யுத்தம் நடைபெற்று வருகிறது.

Update: 2023-01-10 05:00 GMT

சென்னை,

2023-ம் ஆண்டுக்கான முதல் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நேற்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது, தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையில் உள்ள பல வரிகளை கவர்னர் வாசிக்கவில்லை.

மேலும், முதல் அமைச்சர் உரை வாசித்தபோது கவர்னர் பாதியிலேயே வெளியேறி சென்றார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கவர்னரின் இந்தகைய செயலுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கவர்னரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் செம்மொழி பூங்கா, அண்ணா அறிவாலயம் ஆகிய இடங்களில் #GetOutRavi என்ற வாசகத்துடன் பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கவர்னருக்கு ஆதரவாக 'ஆளுநரின் ஆளுமையே' என பாஜகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். கவர்னர்- ஆளும் கட்சி மோதல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் திமுக - பாஜக இடையே போஸ்டர் யுத்தம் நடைபெற்று வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்