கரூர் நகர பகுதியில் நாளை மின்நிறுத்தம்
கரூர் நகர பகுதியில் நாளை மின்நிறுத்தம்;
கரூர்,
கரூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலபுரம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட கரூர் நகர பகுதிகளான தேர் வீதி, ராஜாஜி தெரு, அண்ணா வளைவு, ஆலமரத்தெரு, கச்சேரி பிள்ளையார் கோவில், மாவடியான் கோவில் தெரு, ஜவகர் பஜார் வீதி, மாரியம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் நாளை காலை 7 மணி முதல் 9 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை கரூர் மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.